Monday 12 September 2011

எல்.ஜி. ஆப்டிமஸ் 3டி


எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், உலகின் முதல் முப்பரிமாண ஸ்மார்ட் போனை வடிவமைத்து, எல்.ஜி. ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில் விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதன் மூன்று பரிமாணக் காட்சியைக் காண, நமக்கு எந்தவிதமான தனி கண் கண்ணாடி தேவையில்லை. இதன் மூலம் மொபைல் தொழில் நுட்பத்தில் மூன்றாவது பரிமாணம் வந்துள்ளது. இந்த போனில், முப்பரிமாணக் காட்சிகளாகப் படம் பிடிக்க, 3டி மொபைல் கேமராவும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாமே நம் மனம் கவரும் காட்சிகளை மூன்று பரிமாணத்தில் படம் பிடித்து ரசிக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட் போன், டூயல் கோர், டூயல் மெமரி மற்றும் டூயல் கட்டமைப்பு எனப் பல்வகைச் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடுகையில், இதன் திறன் வேகம் கூடுதலாக உள்ளது.
இதில் 3டி டூயல் 5 எம்பி திறன் கொண்ட கேமரா லென்ஸ் உள்ளதால், எந்த நேரத்திலும், முப்பரிமாணத்தில் போட்டோக்களையும், வீடியோக்களையும் தயாரிக்கலாம். இதன் 4.3 அகல வண்ணத்திரை, முப்பரிமாணக் காட்சிகளை அப்படியே பார்க்கத் தருகிறது. போனில் 3டி முறையில் காட்சிகளைக் காணத் தனி கீ தரப்பட்டுள்ளது. இதன் மூலம் போனில் கிடைக்கும் காலரி, கேமரா, கேம், அப்ளிகேஷன்கள் ஆகியவற்றையும் முப்பரிமாணத்தில் கண்டு பயன்படுத்தலாம். இந்த கேமராவில் எடுக்கப்பட்ட 3டி படங்களையும், வீடியோக்களையும், ஒரு முப்பரிமாணக் காட்சி காட்டும் டிவிக்கு மாற்றி ரசிக்கலாம். ஏற்கனவே முப்பரிமாண எல்.சி.டி. டிவி, மானிட்டர் ஆகியவற்றை எல்.ஜி. முதலாவதாக வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. நன்றி : தினமலர்.

No comments:

Post a Comment